அய்யனார், மேக கருப்பர் கோவில் கும்பாபிஷேகம்

அய்யனார், மேக கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-06-13 18:49 GMT

ஆவூர்:

விராலிமலை ஒன்றியம் சிங்கத்தாகுறிச்சியில் மாம்பாடி அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து கோவிலில் 3 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 9.30 மணியளவில் யாகசாலை கூடத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் குடங்களை சிவாச்சாரியார்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் தலையில் சுமந்தவாறு மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் வேதமந்திரங்கள் முழங்க மாம்பாடி அய்யனார் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., தமிழ்நாடு நெல் அரவை முகவர்கள் சங்க சம்மேளன செயலாளர் எம்.சின்னச்சாமி மற்றும் சிங்கத்தாகுறிச்சி, ஆட்டுக்காரன்பட்டி, வங்காரம்பட்டி, மாத்தூர், மண்டையூர், ஆவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை 3 கிராம பட்டையதாரர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

இதேபோல் பொன்னமராவதி அருகே செவலூர் கிராமத்தில் மேக கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மேக கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. திருவண்ணாமலை ஆதீனம் 46-வது குருமகா சன்னிதானம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மற்றும் செவலூர், மலையடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்