அய்யம்பாளையம் பேரூராட்சி கூட்டம்

அய்யம்பாளையம் பேரூராட்சி கூட்டம் நடந்தது.

Update: 2022-09-29 16:08 GMT

அய்யம்பாளையம் பேரூராட்சி கூட்டம், தலைவர் ரேகா அய்யப்பன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். அய்யம்பாளையம் அய்யனார் கோவில் நீரேற்று நிலையத்தில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியை சுற்றி சுற்றுச்சுவர் கட்டுதல், வளம் மீட்பு பூங்காவில் எற்கனவே உள்ள உலர் களத்தில் மேற்கூரை அமைத்தல், 11-வது வார்டு சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலையில் பேவர் பிளாக் சாலை மற்றும் சிறுபாலத்துடன் கூடிய வடிகால் கட்டுதல், 13-வது வார்டில் சிறுபாலத்துடன் கூடிய வடிகால் கட்டுதல், 1-வது வார்டு மருதாநதி அணைப்பகுதி முதல் ஏ.கே.ஜி. நகர் வரை தார்சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை தடுப்புச் சுவருடன் கூடிய சிறுபாலம் கட்டுதல் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்