அய்யா வைகுண்டர் யுக தர்ம மாநாடு
நெல்லையில் அய்யா வைகுண்டர் யுக தர்ம மாநாடு நடைபெற்றது.
அய்யா வைகுண்டர் யுக தர்ம மாநாடு நெல்லை சந்திப்பில் நேற்று நடந்தது. சாமிதோப்பு பூஜித குரு பாலஜனாதிபதி தலைமை தாங்கினார். அப்போது, அவர் பேசுகையில், அய்யாவின் கருத்துக்களை பிரதிபலிக்கும் வண்ணம் ஆட்சி நடத்துகின்ற தமிழ்நாடு முதல்-அமைச்சர், அய்யா வைகுண்டர் அவதார தினமான மாசி 20-ந் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் பொதுவிடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்றார்.
மாநாட்டில் நிர்வாகிகள் முருகன், அழகன், சீதம் மனோன்மணி, ரெங்கா ரவி, கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணசாமி தங்கவேலு, சட்டநாதன் கல்யாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டையொட்டி மதியம் அன்னதானம் நடந்தது.