அய்யா வைகுண்டர் கோவில் தேரோட்டம்
கடையம் அருகே அய்யா வைகுண்டர் கோவில் தேரோட்டம் நடந்தது.;
கடையம்:
கடையம் அருகே உள்ள சம்பன்குளம் அன்பு சமதர்மபதி அய்யா வைகுண்டர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் திருநாள் அன்று அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் பவனி வந்தார். 11-ம் திருநாளான நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. தர்மபுரம் மடம் ஊராட்சி மன்ற தலைவர் ரூஹான் ஜன்னத்சதாம், துணைத்தலைவர் அனுசியா சைலப்பன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.