ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆயுத பூஜை பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி சென்னை, பெங்களூரிலிருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Update: 2023-10-13 13:46 GMT

சென்னை,

 வரும் 23ம் தேதி ஆயுதபூஜை  கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திங்கள்கிழமை ஆகும். ஏற்கெனவே சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் சேர்த்து விடுமுறை நாளாக உள்ளது. அதுபோல விஜயதசமி தினமும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை யாகும்.தொடர் விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதும். இதனால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை, பெங்களூரிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. தினசரி சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2100 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், ஆயுத பூஜையையொட்டி கூடுதலாக 2,265 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. பொதுமக்கள் கூட்டநெரிசலை தவிர்க்க சென்னை கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்