ஆம்புலன்ஸ் டிரைவர்கள்- போலீசார் விழிப்புணர்வு கூட்டம்
ஆம்புலன்ஸ் டிரைவர்கள்- போலீசார் விழிப்புணர்வு கூட்டம்
காங்கயம்
திருப்பூர் மாவட்டம் காங்கயம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் உத்தரவின் பேரில் போலீசார் சார்பில் காங்கயம் பகுதி தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகுமார் தலைமை தாங்கினார்.
இதில் குடிபோதையில் ஆம்புலன்சை ஓட்டக்கூடாது, அவசர காலங்களை தவிர பிற தேவையில்லாத நேரங்களில் சைரன் ஒலித்த படி இயக்கக்கூடாது, ஒருவரை ஒருவர் முந்தி செல்ல கூடாது எனவும், டிரைவர்கள் முதலுதவிக்கான பயிற்சி பெற்றிருக்க வேண்டும், காயம் அடைந்தவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. இந்த கூட்டத்தில் காங்கயம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.