பெண்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

Update: 2023-02-15 10:16 GMT

அவினாசி

விழுதுகள் அமைப்பு மற்றும் அவினாசிஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக பெண்களின் பாதுகாப்பும், விழிப்புணர்வு என்பது குறித்த கருத்தரங்கம் அவினாசி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு சு. முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். ஐ.சி.சி. ஒருங்கிணைப்பாளர், உதவி பேராசிரியர் பா.ஹேமலதா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஜோ.நளதம் தலைமை உரை ஆற்றினார்.

 விழுதுகள் அமைப்பு நிறுவனர் எம்.தங்கவேல், மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு வழக்கறிஞர் பி.திங்களவள், வழக்கறிஞர் அல்போன்சா பாத்திமா ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சி முனைவர் ரா.தாரணி நிகழ்ச்சி தொகுப்புரை வழங்கினார்.

 நிகழ்ச்சி முடிவில் விழுதுகள் திட்ட மேலாளர் கே சந்திரா நன்றி கூறினார் விழுதுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், ஆர். சுதா, வீ. கோவிந்தராஜ், த. சரண்குமார், உமா ஆகியோர் நிகழ்ச்சிஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்