அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம்;

Update: 2022-11-09 10:38 GMT

குண்டடம்

தாராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போக்சோ மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் தாராபுரம் சார்பு நீதிபதி தர்மபிரபு, குற்றவியல் நீதிபதி பாபு ஆகியோர் கலந்து கொண்டு போக்சோ சட்டம், குழந்தைகளை காப்பதில் எவ்விதம் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி விளக்கி பேசினர். மேலும் போதைப் பொருட்களினால் இளைஞர் சமுதாயம், குடும்பங்கள் எவ்விதம் பாதிக்கப்படுகிறது. அதனால் ஏற்படக்கூடிய குற்ற செயல்கள் பற்றியும் விளக்கி பேசினர். முகாமில் தாராபுரம் சட்ட உதவி குழு செயலாளர் ராஜகோபால், குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகாசலம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்