மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு நடனம்

கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு நடனம்

Update: 2023-09-07 12:22 GMT

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 சார்பில் மத்திய பஸ் நிலையத்தில் தேசிய ஊட்டச்சத்து வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் நாட்டுநலப்பணித்திட்ட மாணவ- மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதேபோல் இதுதொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி நின்றனர். சில மாணவ- மாணவிகள் முகத்தில் விழிப்புணர்வு ஓவியம் வரைந்து கலந்துகொண்டனர். முடிவில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் பஸ் நிலையத்தில் கூடி நின்ற பொதுமக்களுக்கு சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவம் மற்றும் அதை உணவில் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பயன்கள் குறித்த துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்