வேளாண் தொழில் நுட்பங்கள் விழிப்புணர்வு

தெருக் கூத்துக்கள் மூலம் வேளாண் தொழில் நுட்பங்கள் விழிப்புணர்வு எற்படுத்தப்பட்டது.

Update: 2023-07-07 12:38 GMT

தளி

வேளாண்மை துறையில் அட்மா திட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் வேளாண்மை தொழில் நுட்பங்கள் குறித்து தெருக்கூத்து முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வாளவாடி ஊராட்சி அலுவலகம் முன்பு தெருக்கூத்து நடத்தப்பட்டது.

இது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கூறும்போது "தெருக்கூத்து நிகழ்ச்சியில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, பட்டுப்புழு வளர்ப்பு துறை ஆகிய துறைகளின் கீழ் உள்ள திட்டங்களை முன்பதிவு செய்து பயன் அடைவதையும் சிறுதானியங்களின் மருத்துவ பயன்பாடு மற்றும் முக்கியத்துவம், இயற்கை வேளாண்மை பற்றியும், அங்க சான்று பெறுதல் பற்றியும் கலைஞர்கள் மூலமாக தத்ரூபமாக நடத்தி காட்டப்பட்டது.

மேலும் உழவன் செயலியில் மானியத் திட்டங்கள், இடுபொருள் முன்பதிவு, பயிர்காப்பீடு, உரங்கள் இருப்பு, விதைஇருப்பு, வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு விடுதல், சந்தை விலை நிலவரம், வானிலை அறிவுரைகள், அணை நீர்மட்டம், கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட 23 பயன்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறிய கலைஞர்கள் நடிப்பு மூலம் வெளிப்படுத்தினார்கள். என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்