தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு

Update: 2022-09-23 18:45 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் புகையிலை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. அப்போது பொது இடங்களில் விதிமுறைகளை மீறி புகைபிடித்தவர்கள், பள்ளி அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து கடைக்காரர்கள், பொதுமக்களுக்கு நோட்டீசு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேகர், கெலமங்கலம் சுகாதார மேற்பார்வையாளர் ஏகாம்பரம், துப்புரவு ஆய்வாளர் நடேசன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், ராமச்சந்திரன், நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்