சைக்கிள் பேரணியில் கலெக்டர் விழிப்புணர்வு பிரசாரம்

சைக்கிள் பேரணியில் கலெக்டர் விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.

Update: 2022-06-05 17:44 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாவட்ட ஊராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. கம்பிப்பாடு பகுதியில் இருந்து தொடங்கிய தூய்மை குறித்த சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட கலெக்டர் சங்கர்லால்குமாவத், கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், ஊராட்சி உதவி இயக்குனர் பரமசிவம், மாவட்ட வன உயிரின காப்பாளர் ஜெகதீஷ் பாகன் சுதாகர், வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், நகராட்சி ஆணையாளர் மூர்த்தி, தாசில்தார் மார்ட்டின், என்.எஸ்.எஸ் மாவட்ட தொடர்பு அலுவலர் ஜெயகாந்தன், என்.சி.சி. ஆசிரியர் பழனிச்சாமி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கம்பிப்பாடு பகுதியில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனைசாலை வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிள் ஓட்டியபடியே விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட கலெக்டர் மற்றும் கூடுதல் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் சைக்கிள் ஓட்டி பிரசாரம் செய்தனர். தொடர்ந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை சாலை பகுதியில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் குயின்மேரி, துணைத்தலைவர் ஆமினா அம்மாள், ஊராட்சி செயலாளர் கதிரேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்