சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிலரங்கம்
நெல்லையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிலரங்கம் நடந்தது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், சங்கர்நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், நாட்டு நல பணித்திட்டம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிலரங்கத்தை நடத்தியது.
பள்ளி செயலாளர் மற்றும் இந்தியா சிமெண்டு ஆலை முதுநிலை மேலாளர் (மனித வளம்) நாராயணசாமி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், உதவி தலைமை ஆசிரியர் ரெங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணபதி சுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் பரிசு வழங்கி பாராட்டினார். முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் உடையார் நன்றி கூறினார்.