உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.;

Update: 2022-12-01 19:27 GMT

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அலுவலக கூட்டரங்கில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர். அப்போது கலெக்டர் கூறியதாவது:- நாட்டில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் எய்ட்ஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தொற்றை கண்டுபிடிப்பதிலும் சரி, தடுப்பு நடவடிக்கைகளிலும் சரி தமிழகம் முன்னோடி மாவட்டமாக உள்ளது. 34 ஆண்டுகளுக்கு முன்னரே தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பணியில் நாம் மருத்துவர்கள் சிறப்பாக மேற்கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தலைப்புகளில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சமப்படுத்துதல் என்ற தலைப்பில் அனுசரிக்கப்படுகிறது.

தற்போது எய்ட்ஸ்க்கு மிக மிக சிறந்த மருத்துவ வசதி உள்ளது. எய்ட்ஸ் தொற்று வராமல் தடுக்க வேண்டும். வந்துவிட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு நாம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் இருப்பதற்கான உணவு மற்றும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு வழி வகைகள் இருக்கிறது. கரூர் மாவட்டத்தில் எய்ட்ஸ் பரவும் சதவீதத்தை குறைப்பதற்காக தொடர்ந்து முழு முயற்சி எடுத்து வருகிறோம், என்றார். பின்னர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் கலெக்டர் சமபந்தி உணவு அருந்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்