மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்
உடன்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
உடன்குடி:
உடன்குடியில் தமிழ்நாடு ஓருங்கிணைந்த பள்ளிக் கல்வி மையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று கிறிஸ்தியாநகரம் மேல்நிலைப்பள்ளி சார்பாக நடந்தது.
உடன்குடி யூனியன்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமை வகித்து ஊர்வலத்தை தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிக் குழந்தைகளைக் கண்டறிதல், அவர்களை அன்புடன் அரவணைத்து பள்ளியில் சேர்த்தல், அரசின் திட்டங்களை அவர்களுக்கு வழங்குவது குறித்து பேசினார். உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், பள்ளித் தலைமையாசிரியர் லிவிங்ஸ்டன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியே சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் கலந்துகொண்டனர்.