தீ விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு செயல் விளக்க பயிற்சி

சின்னசேலத்தில் தீ விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு செயல் விளக்க பயிற்சி நடந்தது.

Update: 2023-04-19 18:45 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பில் தீத்தொண்டு வார விழாவையொட்டி சின்னசேலம் அருகே பூண்டி கிராமத்தில் உள்ள தனியாா் ஊதுபத்தி கம்பெனியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீ விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது. இதற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவம் தலைமை தாங்கினார். இதில் ஆனந்தகுமார் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டு, தீ விபத்து ஏற்பட்டால், அதனை எவ்வாறு அணைப்பது, தீ விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதேபோல் சின்னசேலம் ரெயில் நிலையம், பஸ் நிலையம், வாரச்சந்தை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், காந்தி நகர் உள்பட பல்வேறு இடங்களில் செயல் விளக்க பயிற்சி நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்