ரெயில் பயணம் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு

ரெயில் பயணம் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு நடந்தது.;

Update: 2023-01-13 18:42 GMT

பொங்கல் பண்டிகையொட்டியை ரெயில்களில் கூட்டம் அலைமோதும். இதனால் பயணிகள் தங்களது உடைமைகள் மற்றும் செல்போன்களை எவ்வாறு பாதுகாப்பாக வைக்க வேண்டும், எப்படி பாதுகாப்பாக பயணம் செய்வது குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கரூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் சார்பில் நேற்று நடைபெற்றது. இதில் ெரயில்வே பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ெரயில் பயணத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தங்களுடைய பொருட்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதும் குறித்து விளக்கமாக எடுத்து கூறினர். இதில், ரெயில்வே போலீசார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்