விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
போதைப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட பகண்டை கூட்டுரோட்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதை பழக்கத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் போதைப்பழக்கத்தால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள், உடல் நலம் பாதிப்பு மற்றும் பின்விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, இளைஞர்களையும், மாணவர்களையும் மீட்போம், போதை இல்லாத சமூகம் அமைப்போம் என்பதை வலியுறுத்தி, ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், துரைராஜ், பகண்டை கூட்டுரோடு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சோலை ஆகியோர் வெள்ளை நிற பேனரில் கையெழுத்திட்டனர். தொடர்ந்து சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் போதை பழக்கத்திற்கு எதிராக கையெழுத்திட்டனர்.