குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

Update: 2022-06-10 22:03 GMT

நெல்லை:

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லையில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் குமாரதாஸ், தொழிலாளர் துறை துணை ஆணையர் (அமலாக்கம்) பிரசன்னா, ஆய்வாளர்கள் நளினி, சத்திய பிரகாஷ், விசுவநாதன், மாயாவதி, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு திட்ட இயக்குனர் சந்திரகுமார், பணியாளர்கள் சேதுராமன், ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நாள் உறுதிமொழியை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து ஊழியர்களும் சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் குமாரதாஸ் தலைமையில் ஏற்றனர். இதேபோல் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் உறுதிமொழியை உதவி ஆணையாளர் சொர்ணலதா தலைமையில் அனைத்து ஊழியர்களும் ஏற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்