விழிப்புணர்வு கையெழுத்து பிரசாரம்

விழிப்புணர்வு கையெழுத்து பிரசாரம் நடந்தது.

Update: 2023-03-16 18:38 GMT

பெண் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலை தடுக்க தமிழக அரசை வலியுறுத்தி விழிப்புணர்வு கையெழுத்து பிரசாரம் கரூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் நடத்தப்பட்டது. இதில், நிர்வாக அறங்காவலர் முருகேசன் கலந்து கொண்டு பெண் தொழிலாளர்கள், மகளிர் சுயக்குழுவினர் மத்தியில் பிரசாரம் செய்தார்.. இதில், பாதுகாப்பான வேலையிடம், 8 மணி நேரம் வேலை, தங்குமிடங்களில் தமிழ்நாடு அரசு விடுதி பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்துதல், மருத்துவ வசதி, சுகாதாரமான விடுதி அறைகள் மற்றும் கழிவறைகள், ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்