சுகாதார பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு

சுகாதார பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

Update: 2023-08-22 10:34 GMT

ஆரணி

ஆரணி நகராட்சி வளாகத்தில் டெங்கு நோய் தடுப்பு பணியாளர்கள், சுகாதார களப்பணியாளர்களுடன் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. ஆணையாளர் கே.பி.குமரன் தலைமை தாங்கினார். செய்யாறு சுகாதார நோய் தடுப்பு மருத்துவர் மேஜர் சிவஞானம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

மேலும் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஹேம்நாத், ஆரணி டவுண் நகர்ப்புற மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில் குமார், நகராட்சி துப்புரவு அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு கொசு உற்பத்தி தடுக்கும் முறைகள் குறித்தும் விளக்கி பேசினர்.

தொடர்ந்து ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேசன், கார்த்திகேயன், மணிமாறன், தனுஷ் பிரகாஷ், நகர்ப்புற சுகாதார செவிலியர் கலைவாணி, சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி மற்றும் களப்பணியாளர்கள், டாக்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது வீடுகளில் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றினை அழிக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்