பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சிவகாசி அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2022-10-01 19:53 GMT

சிவகாசி,

சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்கு உட் பட்ட பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் உசிலை செல்வம் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் ராஜபாண்டியன், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பஞ்சாயத்துக்கு உட்பட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்ற விழிப்புணர்வு ஊர்வலம் மீண்டும் பஞ்சாயத்து அலுவலகத்தை அடைந்தது. ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என விழிப்புணர்வு ஊர்வலத்தில் வந்தவர்கள் கோஷம் எழுப்பினர். விழிப்புணர்வு ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் லட்சுமணபெருமாள் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்