பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.;

Update: 2022-07-04 15:20 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் யூனியன் முள்ளிக்குளம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தென்காசி மாவட்ட உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பிரான்சிஸ் மகாராஜன், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மஞ்சள் துணிப்பை வழங்கினார்கள்.

இந்த பேரணியில் துணை தலைவர் கோட்டூர் சாமி, சுகாதார ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் முத்துமாரி, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் சின்ன செங்கான், ஊராட்சி செயலர் திருமலைக்குமார், பாண்டியகோனார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மீனாம்பிகை உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்