சிவகாசி,
உலக சைக்கிள் தினத்தையொட்டி சிவகாசியில் உள்ள ஹயக்ரிவாஸ் பள்ளி சார்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட சைக்கிள் விழிப்புணர் பேரணி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த பேரணி மடத்துப்பட்டி சென்றது. பின்னர் அந்த கிராம மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்ட பின்னர் அங்கிருந்து பள்ளிக்கு திரும்பினர். பேரணியை வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட அறங்காவலர் குழு முன்னாள் மாவட்ட தலைவர் பலராமன், ம.தி.மு.க. கவுன்சிலர் ராஜேஷ் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஹயக்ரிவாஸ் பள்ளி நிர்வாகி ஜெயக்குமார் செய்திருந்தார்.