சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

கீழக்கரை வனத்துறை சார்பாக மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;

Update: 2023-05-28 18:45 GMT

கீழக்கரை, 

கீழக்கரை வனத்துறை சார்பாக மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கீழக்கரை வனத்துறை அலுவலகத்தில் இருந்து கீழக்கரை முக்குரோடு வழியாக திருப்புல்லாணி, சேதுகரை வரையிலும் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு மாவட்ட வன உயிரின காப்பாளர் பாகன் ஜெகதீஷ் சுதாகர் தலைமை தாங்கினார். கீழக்கரை வனச்சரகர் செந்தில்குமார் மற்றும் வனவர் கனகராஜ் வனக்காப்பாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பேரணியில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தக்கூடாது, பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக்கூடாது, தடை செய்யப்பட்ட மீன் வகைகளை பிடிக்கக்கூடாது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வாகனத்தில் செல்வோர் எடுத்து சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்