ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டார பகுதிகளில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற வேளாண் பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாணவிகள் ஆலங்குளம் அருகே கிடாரகுளத்தில் சிறுதானியங்களின் நன்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர். சிறுதானியங்களின் மகத்துவத்தை பொதுமக்கள் அறியும் வகையில் மாணவிகள் பேரணி மூலம் எடுத்துரைத்தனர்.