பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணி
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணி நடைபெற்றது.
இளையான்குடி,
மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணி நடைபெற்றது. மாநில வாழ்வாதார இயக்க இணை இயக்குனர் ஜெயசுதா கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று கண்மாய் கரையில் முடிவுற்றது.
இதில், உதவி திட்ட அலுவலர்கள் அன்புராஜ், விஜய சங்கரி, வக்கீல் ஜான் சேவியர்தி பிரிட்டோ, இளையான்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்்டர், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை வட்டார இயக்க மேலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.