காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாலிபர் விழிப்புணர்வு நடைபயணம்

Update: 2022-09-26 18:45 GMT

ஓசூர்:

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் விக்ரம் (வயது 23). பி.ஏ. பட்டதாரி. இவர் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூர நடைபயணத்தை கடந்த மே 7-ந் தேதி தொடங்கினார். தேசிய கொடியை ஏந்தி பல்வேறு மாநிலங்கள் பயணித்து நேற்று ஒசூர் வழியாக தமிழகம் வந்தடைந்தார். அவருக்கு அங்கு பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் வரவேற்பு அளித்தனர். 

மேலும் செய்திகள்