விழிப்புணர்வு பேரணி

மனநல திட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2022-09-12 19:22 GMT

உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி மனநல திட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விருதுநகர் செந்திக்குமார் நாடார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட இந்த பேரணியினை சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் முருகவேல் தொடங்கி வைத்தார். பேரணி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தொடங்கி விருதுநகர் செந்திக்குமார் நாடார் கல்லூரியில் முடிவடைந்தது. பேரணிக்கான ஏற்பாடுகளை அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் டாக்டர் முருகேசன், மனநல மருத்துவ பிரிவு டாக்டர்கள் இளவரசி, விது பிரபா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்