காட்டுமன்னார்கோவிலில் தூய்மை நகரங்களுக்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

காட்டுமன்னார்கோவிலில் தூய்மை நகரங்களுக்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

Update: 2022-07-24 17:52 GMT


காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியின் சார்பில் தூய்மை நகரகங்களுக்கான பொதுமக்களின் பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் கணேசமூர்த்தி தலைமை தாங்கி, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

துணைத் தலைவர் ராஜேஸ்வரி மணிமாறன், பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்டுமன்னார்கோவில் பருவதராஜ குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த பேரணி நகரின் முக்கிய விதி வழியாக சென்று பேரூராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது.

இதில் கலந்து கொண்ட மாணவர்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும், குப்பைகளை தரம்பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்குதல் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மதிவாணன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் துரைராஜ், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்