அரசு பள்ளி சார்பில் விழிப்புணர்வு பேரணி

அரசு பள்ளி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது;

Update: 2022-07-05 21:39 GMT

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி சார்பில் புகையிலை மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த பேரணியை உதவி கலெக்டர் ரிஷாப் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சேரன்மாதேவி கல்வி மாவட்ட அலுவலர் ரெஜினி, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் டைட்டஸ் பெர்ணான்டோ, பள்ளி தலைமை ஆசிரியை மரகதவல்லி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நெய்னா முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். இப்பேரணியானது பள்ளியில் இருந்து தொடங்கி பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்