விழிப்புணர்வு பேரணி

தூய்மை பாரத இயக்கம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2022-07-04 20:00 GMT

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டையில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தாய் முன்னிலை வகித்தார். சிபியோ உண்டு உறைவிடப்பள்ளி இயக்குனர் கோவிந்தன் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி வெம்பக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து தொடங்கி யூனியன் அலுவலகம் வழியாக அக்ரஹாரம் தெரு, கிருஷ்ணன்கோவில் தெரு, போலீஸ் ஸ்டேஷன் தெரு வழியாக பஸ் ஸ்டாண்ட் வரை பேரணி நடைபெற்றது. பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், சுற்றுப்புறத்தை காப்போம் என பள்ளி மாணவ, மாணவிகள் கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்