அச்சன்புதூர்:
தமிழக அரசின் உத்தரவின்படி, கடையநல்லூர் நகராட்சி பகுதியினை தூய்மையான நகரமாக மாற்றுவதற்கு மாதம்தோறும் சிறப்பு கூட்டு தூய்மை பணியினை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடையநல்லூர் நகராட்சி புதிய பஸ் நிலையத்தில் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமையில் கல்லூரி மாணவர்கள் இணைந்து தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி எடுத்தனர். தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், காவல் துறை அதிகாரிகள், தூய்மை இந்திய திட்ட மேற்பார்வையாளர் மற்றும் பரப்புரையாளர்கள், தூய்மை மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.