கடையநல்லூர்:
கடையநல்லூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் குமரன் தலைமை தாங்கினார். ஜே.சி. மணிகண்டன், சுகாதார அலுவலர் பச்சையா பாஸ்கரன், பெஸ்ட் பள்ளி தாளாளர் ராஜா, சுகாதார ஆய்வாளர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பேராசிரியர் அனுராதா வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக நகராட்சி ஆணையாளர் சுகந்தி கலந்து கொண்டு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த பேரணி புதிய பஸ் நிலையத்தில் நிறைவு பெற்றது. உதவி பேராசிரியர் பாப்புராஜ் அனைவரையும் ஒருங்கிணைத்தார். முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஆறுமுகம் நன்றி கூறினார்.