குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

மானாமதுரையில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-06-27 19:10 GMT

மானாமதுரை,

மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நகராட்சி சார்பில் சுகாதார ஆய்வாளர் பாண்டிசெல்வம் ஏற்பாட்டில், நகராட்சி துணை தலைவர் பாலசுந்தரம் முன்னிலையில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. குப்பைகளை பிரித்து வழங்குவதால் ஏற்படும் நன்மைகள், குப்பையை உரமாக மாற்றுவது குறித்து மாணவிகளுக்கு ஆடல், பாடல், நாடகங்கள் மூலம் விளக்கப்பட்டது. இதில் பள்ளி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பேபலிட், உடற்கல்வி ஆசிரியை கலைச்செல்வி, துப்புரவு பணி மேற்பார்வையாளர் கார்த்திக் ஹரினி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்