தேனி அருகே தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேனி அருகே தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. அதன் ஒரு பகுதியாக பழனிசெட்டிபட்டி பஸ் நிறுத்தம் அருகில் தூய்மை பணிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார்.
பின்னர் பொதுமக்கள், பஸ் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் வினியோகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி, துணைத்தலைவர் மணிமாறன், செயல்அலுவலர் சின்னச்சாமி பாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.