மக்கும், மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சீர்காழியில் மக்கும், மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-07-08 18:19 GMT

சீர்காழி:

சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் சீர்காழி நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் செந்தில் ராம்குமார், வருவாய் ஆய்வாளர் ராஜகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி வரவேற்றார். பள்ளி மாணவர்களுக்கு நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போட்டி தேர்வு நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் நகராட்சி பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் முரளிதரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்