குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க அறிவுறுத்தி குன்றத்தூர் நகராட்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கும் வகையில் குன்றத்தூர் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.;

Update: 2022-11-08 12:38 GMT

நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் குன்றத்தூரில் உள்ள லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி சார்பில் 'என் குப்பை என் பொறுப்பு' என்ற தலைப்பில் புதிய பாடல் ஒன்றை வெளியிடும் நிகழ்ச்சி குன்றத்தூர் பஸ் நிலையத்தில் பள்ளி தாளாளர் ஜான் சேவியர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் குன்றத்தூர் நகர மன்ற தலைவர் சத்தியமூர்த்தி, குன்றத்தூர் நகராட்சி கமிஷனர் தாமோதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அப்போது அரசு பஸ்சுக்காக பள்ளி மாணவர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் காத்திருப்பது போல் காத்திருந்து திடீரென ஒன்று கூடி பஸ் நிலையத்தில் நடனம் ஆடியது. பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து குன்றத்தூர் நகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கான பாடல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. மேலும் தினந்தோறும் குப்பைகளை சேகரிக்க வாகனங்களில் செல்லும் துப்புரவு பணியாளர்கள் விசில் அடிப்பதற்கு பதிலாக இந்த பாடலை ஒளிபரப்பியவாறு குப்பைகளை சேகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்