அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மூங்கில்துறைப்பட்டுஅரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருளால் ஏற்படும் தீ்மைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமை தாங்கி, போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி கூறி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் பள்ளி வாளாகத்தில் யாரேனும் போதைப்பொருள் பயன்படுத்தினால் உடனடியாக போலீ்ஸ் நிலையத்திற்கு தகவல் தொிவிக்க வேண்டும் என்றும், மாணவ, மாணவிகள் போதைக்கு அடிமையாவதை தடுக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். இதில் மூங்கில்துறைப்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஹரிதாஸ், போலீசார் கலையரசன், சுதர்சன், வேங்கடபதி உள்பட ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.