பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-11-19 18:58 GMT

ஜோலார்பேட்டை

பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

உலக குழந்தைகள் தினத்தையொட்டி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையம் சார்பில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு போக்சோ, சைல்டு ஹெல்ப்லைன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக பள்ளி மாணவிகளுக்கு இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார், ரோஜாபூக்களை வழங்கி உலக குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்தனர். அதன் பிறகு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று ேபாலீஸ் நிலைய செயல்பாடு, பராமரிக்கப்படும் பதிவேடுகள், பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு புகார் மனு அளித்தல், பல்வேறு வகையான துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி பேசுகையில், பள்ளிப் பருவத்தில் மாணவிகள் அனைவரும் கல்வியில் கவனம் செலுத்தி உயர்கல்வி பெற்று உயர்ந்த நிலையை அடைய வேண்டும். மேலும் தங்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளிக்கும் நபர்கள் குறித்து தகவல் அளிக்கலாம். குழந்தை கடத்தல், குழந்தை திருமணம், பாலியல் தொந்தரவு போன்றவை சட்டத்துக்கு எதிரானது. எனவே சமூக நோக்கத்தோடு உங்கள் பகுதியில் பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் பாலியல் ரீதியாகவும், குழந்தை திருமணம் உள்ளிட்ட விரோத செயல்கள் நடந்தால், போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என்றார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீசார், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்