பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-08-22 18:32 GMT

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்டம் சிறுவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக நலத்துறை சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர் கமலி கலந்து கொண்டு பேசுகையில், பெண்களுக்கான உதவி எண் 181 குறித்து தெரிவித்து, சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அந்த எண்ணுக்கு போன் செய்தால், குடும்ப பிரச்சினை, மனநல ஆலோசனை, மருத்துவ உதவி, சட்ட ஆலோசனை, அவசர மீட்பு பணி, தற்காலிக தங்குமிடம் போன்ற உதவிகள் கிடைக்கும். இதனை அனைத்து பெண்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெண் குழந்தைகள் 1098 என்ற எண்ணை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்று கூறினார். நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியை தனலட்சுமி, ஆசிரியைகள் ஆகியோர் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான நலன் குறித்து விளக்கி பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்