விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி

குமாரபாளையம் அரசு பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-10-19 18:44 GMT

குமாரபாளையம்

குமாரபாளையத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் சி.நா.பாளையம் நகராட்சி மற்றும் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் விபத்தில்லா தீபாவளி என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தளிர்விடும் பாரதம் சமூக சேவை குழுவின் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரபு வரவேற்றார். தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை கற்பகம், உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தீயணைப்பு மீட்புப் பணி நிலைய அலுவலர் தண்டபாணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- பெரியவர்கள் மேற்பார்வையில் பட்டாசுகளை குழந்தைகள் வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது ஒரு வாளி நீர் எப்போதும் பக்கத்தில் பாதுகாப்புக்காக வைத்திருக்க வேண்டும், தீ புண்ணுக்கு தண்ணீர் உடனே ஊற்ற வேண்டும் என்று பேசினார். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. விழாவில் தீயணைப்பு துறையை சார்ந்த அருள்குமார், கோகுல கிருஷ்ணன், கோகுல், ஜோதீஸ்வரன் மற்றும் தளிர்விடும் பாரதம் அமைப்பின் நிர்வாகிகள், பள்ளிக்கூட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் சரண்யா பிரபு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்