விழிப்புணர்வு நிகழ்ச்சி

‘நம்ம ஊரு சூப்பரு' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2022-08-22 19:33 GMT

விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு கிராம பஞ்சாயத்து கே.செவல்பட்டி கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 'நம்ம ஊரு சூப்பரு' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியின் போது ஒட்டுமொத்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதனை உதவி திட்ட அலுவலர்கள் ஜான் மைக்கேல் ஆண்டனி, லீலாவதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் விருதுநகர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, போத்திராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக் மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு, சுகாதாரம் பேணுதல் ஆகியவை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது. முன்னதாக பஞ்சாயத்து தலைவர் செல்வி வரவேற்றார். இதில் பள்ளி மாணவர்கள், ெபாதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்