உலக நீதி தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்

உலக நீதி தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்

Update: 2023-07-17 19:46 GMT

தஞ்சையில் உலக நீதி தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் தொடங்கி வைத்தார்.

உலக நீதி தினம்

தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் உலக நீதி தினத்தையொட்டி தஞ்சை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஜெசிந்தாமார்ட்டின் கொடியசைத்து தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சர்வதேச நீதிக்கான முக்கியத்துவம். அதன் ஆணை மற்றும் கடுமையான சர்வதேச குற்றங்களுக்கு தண்டனையின்மைக்கு எதிரான போராட்டத்தில் நீதியின் முக்கியத்துவம் பற்றிய பொது விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக உலக நீதி தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் குறிப்பிடத்தக்க சர்வதேச குற்றங்களை முன்னெடுப்பதற்காகவும் பல்வேறு பிரச்சினைகளின் விளைவாக துன்பங்களை பாதிக்கப்பட்டவர்களுக்கும் சகித்து கொண்டிருக்கும் அவர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. நீதி என்பது அனைவருக்கும் சமம். நீதிக்கு ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

நீதிபதிகள் பங்கேற்பு

இந்த விழிப்புணர்வு ஊர்வலம் தஞ்சை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டு ராமநாதன் ஆஸ்பத்திரி ரவுண்டானா வழியாக சென்று குந்தவை நாச்சியார் கல்லூரி வளாகத்தில் முடிவடைந்தது.

இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி இந்திரா காந்தி, மாவட்ட தலைமையிடத்து அனைத்து நீதிபதிகள், வக்கீல்கள், தஞ்சை குந்தவை நாச்சியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் போலீசார், நீதிமன்ற ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் மற்றும் சட்டத்தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்