நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்

நாகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்;

Update: 2023-10-19 18:45 GMT


நாகை புதிய பஸ் நிலையத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். திருச்சி சாலை பாதுகாப்பு அலகு கோட்ட பொறியாளர் புவனேஸ்வரி, உதவி கோட்ட பொறியாளர்கள் விவேகானந்தன், பிரமிளா, சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக சென்று உதவி கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந்தது. அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது. ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளை ஓட்ட வேண்டும் என்ற சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு வினியோகம் செய்தனர். இதில் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர்கள், சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாப்பா கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்