பெண்கள்-குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
பெண்கள்-குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தில் பெண்கள்-குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசாரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையத்தின் இலவச தொலைபேசி எண்ணான 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் குழந்தை தொழிலாளர்கள் இருந்தால் அதனை ஒழிக்க ஒத்துழைப்பு நல்குமாறும் கூறினர்.