வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2023-10-05 21:06 GMT

துவாக்குடி:

துவாக்குடி அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதியில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வந்த வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருவெறும்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார், துவாக்குடி போக்குவரத்து போலீசாருடன் இணைந்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளை மறித்து அவர்களுக்கு சாலை விதிகளை பின்பற்றுவது குறித்து வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்