குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
கடையநல்லூர் அருகே குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;
அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கருப்பாநதி அணை பகுதி கலைமான் நகரில் மலைவாழ் மக்களுக்கு குழந்தை திருமணம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வனரேஞ்சர் சுரேஷ், துணை சூப்பிரண்டு (பயிற்சி) கிரிஷ் யாதவ், கூடுதல் சூப்பிரண்டு சூரியமூர்த்தி மற்றும் போலீசார் கலந்துகொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மலைவாழ் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.