உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் அமைப்பதற்கான விழிப்புணர்வு கூட்டம்

உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் அமைப்பதற்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-07-09 18:15 GMT

கரூர் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் அமைப்பதற்கான விழிப்புணர்வு கூட்டம் கரூர் வேளாண்மை துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குனர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு, விவசாயிகள் தொழில் முனைவோராக மாறுவதன் அவசியத்தை குறித்தும், தனிநபர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள் திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகப்பட்சம் ரூ.10 லட்சம் வரை மானியம் பெறலாம் எனவும் தெரிவித்தார். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் அலுவலகத்தின் திட்ட ஆலோசகர் சோமேஷ், செல்வம் ஆகியோர் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு திட்டம் குறித்த விரிவான பயிற்சி அளித்தனர். மேலும் திட்டத்தில் மானியம் பெற விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தொழில் முனைவோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்