விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்

Update: 2023-08-27 20:30 GMT

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் தேசிய வேளாண் சந்தை தொடர்பாக வியாபாரிகள், விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதற்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், இ.நாம் திட்டத்தால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் வியாபாரிகளுக்கு தேசிய அளவிலான சந்தையில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். தரமான விளைபொருட்களை ஒரே இடத்தில் கொள்முதல் செய்ய வாய்ப்பு உள்ளது. செல்போன் மூலம் ஏலம் கோரும் வசதி உள்ளது. மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

எனவே இந்த திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் விவசாயிகள், வியாபாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்